என் மலர்
செய்திகள்

குடியாத்தம் அருகே கோவில் சுவரில் பைக் மோதி கல்லூரி மாணவர் பலி
குடியாத்தம் அருகே கோவில் சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் இறந்தார்.
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த சின்ன தோட்டாலத்தை சேர்ந்தவர் கோபிநாதன். கூலி தொழிலாளி. இவரது மகன் ரவிச்சந்திரன் (வயது 21). குடியாத்தம் அரசினர் சிறுமலர் ஆலை கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று இவர் குடியாத்தத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு பைக்கில் சென்றார். பின்னர் அங்கிருந்து சின்னதோட்டாலம் நோக்கி வந்து கொண்டு இருந்தார். கொத்தகுப்பம் அருகே வந்தபோது நிலை தடுமாறி ஓடிய பைக் அங்குள்ள கோவில் சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரவிச்சந்திரன் படுகாயம் அடைந்தார்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரவிச்சந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவநேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story