search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டுப்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
    X

    மேட்டுப்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மேட்டுப்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோவை:

    மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டை சேர்ந்தவர் உமாராணி (வயது 54). இவர் உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு உமாராணி திடுக்கிட்டார்.

    பின்னர் வீட்டில் பீரோவில் 4 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் பணம், வெள்ளி பொருட்கள் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    இதுபற்றி மேட்டுப்பாளையம் போலீசில் உமாராணி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×