என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 3 மணி நேரம் தாமதம்
By
மாலை மலர்21 Sep 2016 5:54 AM GMT (Updated: 21 Sep 2016 5:54 AM GMT)

சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 3 மணிநேரம் தாமதமாக வந்ததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
நாகர்கோவில்:
கேரள மாநிலம் கொல்லம் அருகே உரம் ஏற்றிச் சென்ற சரக்கு ரெயில் தடம்புரண்டது. இதையடுத்து கொல்லம் - எர்ணாகுளம் வழியாக செல்லும் 6 ரெயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் தடம் புரண்ட சரக்கு ரெயில் மீட்பு பணிகள் முழுமையாக நிறைவேறவில்லை. இதனால் திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில் வரும் ரெயில்கள் அனைத்தும் தாமதமாக வந்தது.
இன்று காலை குருவாயூரில் இருந்து நாகர்கோவில் வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவிலுக்கு காலை 5.15 மணிக்கு வரவேண்டும். ஆனால் அந்த ரெயில் குறிப்பிட்ட நேரத்திற்கு வரவில்லை. பின்னர் 3 மணி நேர தாமதமாக 8.15 மணிக்கு நாகர்கோவில் வந்தது.
பயணிகளிடம் ரெயில் தாமதம் குறித்து முன் அறிவிப்பு தெரிவிக்கவில்லை. இதனால் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பயணிகள் மற்றும் கைக்குழந்தைகளோடு வந்த பெண்களும் கடும் அவதிப்பட்டனர். நேற்றும் இதுபோல் நெல்லையில் இருந்து நாகர்கோவில் வழியாக ஹப்பாவுக்கு செல்லும் ரெயில் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். அதிகாரிகளிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
×