search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக-கர்நாடக எல்லையில் துணை ராணுவம் குவிப்பு
    X

    தமிழக-கர்நாடக எல்லையில் துணை ராணுவம் குவிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழகத்துக்கு காவிரியில் இன்று முதல் 27-ந்தேதி வரை விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து தமிழக-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் வழக்கத்தைவிட அதிகமான துணை ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    ஓசூர்:

    தற்போது மொத்தம் 80 துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளை ஏந்தியவாறு ஷிப்ட் முறையில் அங்கு மாறி, மாறி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நுழைவு வாயில் அருகே, துணை ராணுவத்தினர் சாமியான பந்தல் ஒன்றையும் அமைத்துள்ளனர். மேலும், நுழைவு வாயிலை ஒட்டியவாறு இரும்பு தடுப்பு கம்பிகளை அமைத்து, போராட்டக்காரர்கள் மற்றும் கன்னட அமைப்புகள் அங்கு திரண்டு விடாமல் இருக்கும் வகையில் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    சில துணை ராணுவ வீரர்கள், போலீசார் உதவியுடன், அந்த வழியாக வந்து செல்லக்கூடிய வாகனங்களை சோதனையிட்ட பிறகு அனுப்பி வைக்கின்றனர்.

    அதுபோல் தமிழக போலீசாரும் எல்லையில், தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். எல்லையை சுற்றியுள்ள கிராமங்களிலும் தமிழக உளவு பிரிவுகளை சேர்ந்த போலீசார் சாதாரண உடைகளை அணிந்து கண்காணித்து வருகிறார்கள்.

    அவர்கள் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் குறித்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சட்டம் மற்றும் ஒழுங்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கின்றனர். அதன் பேரில் போலீசார் அந்த சந்தேக நபர்களை பிடித்து விசாரித்து, எழுதி வாங்கி விட்டு அனுப்பி வைக்கிறார்கள்.

    Next Story
    ×