என் மலர்

  செய்திகள்

  விருதுநகரில் சுவர் இடிந்து விழுந்து தாய்-மகள் படுகாயம்
  X

  விருதுநகரில் சுவர் இடிந்து விழுந்து தாய்-மகள் படுகாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விருதுநகரில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் தாய் மற்றும் மகள் படுகாயம் அடைந்தனர்.

  விருதுநகர்:

  விருதுநகர் குல்லூர்சந்தை கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் அழகம்மாள் (வயது 40). இவரது மகள் முத்துலட்சுமி (வயது 18). கல்லூரி மாணவி.

  இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் பாக்கியரத்தினம். நேற்று இரவு அழகம்மாள் தனது மகள் முத்துலட்சுமியுடன் வீட்டு முன்பு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

  அப்போது எதிர் பாராத விதமாக பாக்கிய ரத்தினத்தின் வீட்டு சுவர் திடீர் என இடிந்து அவர்கள் முது விழுந்தது. இதில் அழகம்மாளும் அவரது மகள் முத்துலட்சுமியும் பலத்த காயம் அடைந்தனர்.

  அவர்களை அக்கம் பக்கத் தினர் மீட்டு, சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சூரிக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×