என் மலர்

  செய்திகள்

  ஒழுகினசேரியில் பெட்ரோல் பங்க் அருகே திடீர் தீ விபத்து
  X

  ஒழுகினசேரியில் பெட்ரோல் பங்க் அருகே திடீர் தீ விபத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒழுகினசேரியில் இன்று அதிகாலை பெட்ரோல் பங்க் அருகே திடீரென தீ பிடித்ததால் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் மின்னல் வேகத்தில் வந்த தீயை அணைத்தனர்.
  நாகர்கோவில்:

  நாகர்கோவில், ஒழுகின சேரி பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்கின் பின்புறம் ஏராளமான செடி,கொடிகள் வளர்ந்திருந்தன. கடந்த சில வாரங்களாக அடித்த வெயிலில் இவை காய்ந்து விட்டன.  இன்று அதிகாலை 3 மணிக்கு இந்த செடி, கொடிகள் பகுதியில் இருந்து கரும்புகை வந்தது. பங்க் ஊழியர்கள் புகையை பார்த்ததும் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் புதர்போல் வளர்ந்திருந்த செடி, கொடிகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

  பங்க் ஊழியர்கள் தீயை அணைக்க  முயன்றனர். அப்போது காற்று பலமாக வீசியதால் தீ பங்க்குக்கு பரவும் அபாயம் ஏற்பட்டது. உடனே பங்க் ஊழியர்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்குள் தகவல் கொடுத்தனர்.
  அங்கிருந்து மூத்த அதிகாரி வெங்கடசுப்பிரமணியன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு புதரில் பிடித்த தீயை அணைத்தனர்.

  இதனால் பெட்ரோல் பங்கிற்கு ஏற்பட இருந்த பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது. அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
  Next Story
  ×