என் மலர்

  செய்திகள்

  தக்கலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: தொழிலாளி பலி
  X

  தக்கலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: தொழிலாளி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தக்கலை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
  தக்கலை

  தக்கலை அருகே பறைக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜோசப்ராஜ் (வயது 38). தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் நேற்று பறைக்கோட்டில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். எதிரில் நாகர்கோவிலில் இருந்து இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்தது.

  அந்த மோட்டார் சைக்கிளை திருவிதாங்கோட்டை சேர்ந்த சிவரஞ்சன் (21) என்பவர் ஓட்டினார். பின்னால் முளகுமூடைச் சேர்ந்த விபின் (16), இரவி புதூர்கடையை சேர்ந்த ரெக்சிலின் ஸ்மைலி (16) ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

  பறைகோடு சந்திப்பில் வந்தபோது எதிர்பாராத விதமாக இந்த இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர்.
  இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஜோசப்ராஜ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்து போனார். மற்ற 3 பேரும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

  இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
  Next Story
  ×