என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம்: கலெக்டர் நடராஜன் ஆய்வு
ராமநாதபுரம்:
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் சிறப்பு முகாம் நடைபெற்றது.
ராமநாதபுரம் நகரில் அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப்பள்ளி, வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கீழக்கரை தாலுகாவில் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் நடராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முகாமிற்கு வரும் பொது மக்களின் தேவை அறிந்து உரிய விண்ணப்பங்களை வழங்கி வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், 25-ந்தேதி அன்று நடைபெறவுள்ள 2-வது சிறப்பு முகாம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமெனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராம்பிரதீபன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, வட்டாட்சியர்கள் மாரி (ராமநாதபுரம்), இளங் கோவன் (கீழக்கரை) உட்பட அரசு அலுவலர்கள் உட னிருந்தனர்.