என் மலர்

    செய்திகள்

    பெரியகுளம் அருகே கண்மாய்க்குள் பாய்ந்த சுற்றுலா கார்
    X

    பெரியகுளம் அருகே கண்மாய்க்குள் பாய்ந்த சுற்றுலா கார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெரியகுளம் அருகே நடந்த சாலை விபத்தில் கார் முதியவர் மீது மோதி கண்மாய்க்குள் பாய்ந்தது.
    பெரியகுளம்:

    கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா கார் ஒன்று வந்தது. காரை குமுளியைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 41) என்பவர் ஓட்டி வந்தார். சுற்றுலா சென்றுவிட்டு கேரளாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    பெரியகுளம் அருகே நஞ்சாபுரம் கண்மாய் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அழகர் (வயது 70) என்பவர் மீது கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

    இதனால் நிலை தடுமாறிய கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கண்மாய்க்குள் பாய்ந்தது. இதில் காரில் வந்த தம்பதி மற்றும் அவர்களது குழந்தைகள் படுகாயமடைந்தனர். இவர்கள் மற்றும் டிரைவர் பாலமுருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வடகரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×