என் மலர்
செய்திகள்

வேலூர் அருகே ஊராட்சி செயலர் மீது தாக்குதல்
வேலூர் அருகே ஊராட்சி செயலரை தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த அப்புக்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 36). இவர், கெங்கநல்லூர் ஊராட்சி செயலராக உள்ளார். ஆறுமுகத்திற்கும், அப்புக்கல் கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு ஆறுமுகத்தை முன்விரோத கும்பல் சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதுகுறித்து அவர், அணைக்கட்டு போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், ஊராட்சி செயலர் ஆறுமுகம் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளார்.
Next Story