என் மலர்
செய்திகள்

பொள்ளாச்சியில் ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டில் தங்க நாணயங்கள் திருட்டு
பொள்ளாச்சியில் ரியல் எஸ்டேட் புரோக்கர் வீட்டில் தங்க நாணயங்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவை:
பொள்ளாச்சி ஸ்ரீ கணபதி நகரை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 58). ரியல் எஸ்டேட் புரோக்கர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருமூர்த்தி மலையில் உள்ள கோவிலுக்கு சென்றார்.
பின்னர் இரவு வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த 5 பவுன் தங்க நாணயங்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து மயில்சாமி மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க நாணயங்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Next Story