என் மலர்

  செய்திகள்

  திருச்சி அருகே பெண்ணை கத்தியால் குத்திய பள்ளி மாணவர் கைது
  X

  திருச்சி அருகே பெண்ணை கத்தியால் குத்திய பள்ளி மாணவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சி அருகே ஆடுகளுக்கு இலை பறித்த தகராறில் பெண்ணை கத்தியால் குத்திய பள்ளி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

  மணப்பாறை:

  திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வளநாடு சின்னாரம்பட்டியை சேர்ந்தவர் திலகத்தம்மை (வயது33). இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது.

  சம்பவத்தன்று அப்பகுதியை சேர்ந்த செல்வகுமார் மகன் 9-ம்வகுப்பு படிக்கும் மாணவர் தமிழ்மணி(14) , திலகத்தம்மை தோட்டத்திற்குள் சென்று ஆடுகளுக்கு தேவையான இலைகளை பறித்ததாக கூறப்படுகிறது. இதனால் தமிழ்மணியை திலகத்தம்மை சத்தம் போட்டுள்ளார்.

  இதில் தகராறு ஏற்படவே ஆத்திரமடைந்த தமிழ்மணி, கத்தியால் திலகத்தம்மையை சரமாரி குத்தினார். பலத்த காயமடைந்த அவர் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வருகிறார்.

  இது குறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் விசாரணை நடத்தி தமிழ்மணியை கைது செய்தனர்.

  Next Story
  ×