என் மலர்
செய்திகள்

முத்துப்பேட்டை அருகே போலீசிடம் தகராறு செய்த 3 பேர் கைது
முத்துப்பேட்டை அருகே போலீசிடம் தகராறு செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அருகே உள்ள எடையூரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் எடையூர் சப்-இன்ஸ்பெக்டர் ரவி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ரவியை பணி செய்யவிடாமல் தகராறு செய்துள்ளனர். இது தொடர்பாக ரவி இன்ஸ்பெக்டர் முருகனிடம் புகார் அளித்தார். இது குறித்து சங்கேந்தியை சேர்ந்த மகேஷ், விக்னேஷ்வரன், பாலசுப்பிரமணியன், தமிழ்ச்செல்வன்,பிரதிப், ராஜசேகர், மணிமாறன்,ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தார்.
இதில் இன்று காலை விக்னேஷ்வரன், பாலசுப்பிரமணியன், மகேஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள 4 பேர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story