என் மலர்

  செய்திகள்

  திருவள்ளூர் அருகே முன்னாள் அமைச்சர் ரமணா கார் கண்ணாடி உடைப்பு
  X

  திருவள்ளூர் அருகே முன்னாள் அமைச்சர் ரமணா கார் கண்ணாடி உடைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவள்ளூர் அருகே முன்னாள் அமைச்சர் ரமணா கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்
  திருவள்ளூர்:

  கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூரில் நேற்று முன்தினம் இரவு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா கலந்து கொண்டார்.

  கூட்டம் முடிந்ததும் முன்னாள் அமைச்சர் ரமணா காரில் புறப்பட்டார். அப்போது சிலர் அவரது கார் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் காரின் பின்பக்க கண்ணாடி உடைந்தது.

  இது குறித்து ரமணாவின் உதவியாளர் திருவள்ளூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கடம்பத்தூர் ஒன்றிய இளைஞர் பாசறையின் நிர்வாகி வசந்தகுமாரை கைது செய்தனர்.

  மேலும் இது தொடர்பாக 9 பேரை தேடி வருகிறார்கள். கோஷ்டி பூசலால், கார் மீது கல் வீச்சு சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
  Next Story
  ×