என் மலர்

  செய்திகள்

  மாநகர பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்: 2 பேர் கைது
  X

  மாநகர பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்: 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாநகர பஸ் கண்டக்டர் மீது தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து, பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
  பெரியபாளையம்:

  ஆவடியில் இருந்து பெரிய பாளையத்தை அடுத்த ஆரணிக்கு நேற்று இரவு மாநகர பஸ் சென்றது. கண்டக்டராக ராஜேந்திரனும், டிரைவராக ரகுபதியும் இருந்தனர். ஆரணி பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்ட பின்னர் பஸ்சை திருப்புவதற்காக டிரைவர் பின்பக்கமாக ஓட்டினார்.

  அப்போது அங்கு நின்ற ஆரணி தமிழ் காலனியை சேர்ந்த அப்பு, ஆனஸ்ட்ராஜ் ஆகியோர் பஸ் டிரைவர், கண்டக்டரை கேலி செய்தனர். இதில் ஏற்பட்ட மோதலில் டிரைவர் ரகுபதி, கண்டக்டர் ராஜேந்திரனை அவர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் ஏற்பட்டது.

  இது குறித்து ஆரணி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பு, ஆனஸ்ட் ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் 2 பேரையும் பொன்னேரி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
  Next Story
  ×