என் மலர்

  செய்திகள்

  தூத்துக்குடியில் தனியார் கம்பெனி அதிகாரி வீட்டில் பணம் திருட்டு: வாலிபர் கைது
  X

  தூத்துக்குடியில் தனியார் கம்பெனி அதிகாரி வீட்டில் பணம் திருட்டு: வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடியில் தனியார் கம்பெனி அதிகாரி வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

  தூத்துக்குடி:

  தூத்துக்குடி தாளமுத்து நகர் தஸ்நேவிஸ் நகரை சேர்ந்தவர் கந்தராஜா (வயது42). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கந்தராஜா வீட்டை பூட்டி விட்டு தனது குடுபத்தினருடன் வெளியூர் சென்று விட்டார்.

  இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர் கந்தராஜா வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரம் மற்றும் செல்போன் நெட்கார்டுகளை திருடி சென்று விட்டான். இதுகுறித்து கந்தராஜா தாளமுத்துநகர் போலீசில் புகார் செய்தார்.

  போலீசார் விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த அஸ்வின் (26) என்பவர் கந்தராஜா வீட்டில் பணம் மற்றும் நெட்கார்டுகளை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×