என் மலர்
செய்திகள்

மதுரையில் 3 வாலிபர்களிடம் நகை-பணம் பறிப்பு
மதுரை:
அழகர்கோவில் அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் கண்ணன் (வயது33). இவர் நேற்று இரவு தல்லாகுளம் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். சர்வேயர்காலனி பகுதியில் சென்றபோது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர் அவரை வழிமறித்து அவரிடம் இருந்த பேக்கை பறித்து சென்றுவிட்டார்.
அதில் 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 ஏ.டி.எம். கார்டுகள் இருந்ததாக புதூர் போலீசில் கண்ணன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணப்பையை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
தெப்பக்குளம் பால ரெங்காபுரத்தை சேர்ந்தவர் விஷ்ணு (30). இவர் தனது நண்பர் கிருஷ்ணகுமாருடன் நேற்று இரவு இந்திரா நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காமராஜர் திரு.வி.க. தெருவை சேர்ந்த சரவணக்குமார் (23), மேற்கு அண்ணா மேற்கு தெரு கனகராஜ் (22), யோகீஸ்வரன் (17) ஆகியோர் அவர்களை வழிமறித்து கத்திமுனையில் செல்போன்கள் மற்றும் ரூ.11 ஆயிரத்தை பறித்து சென்றுவிட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.