என் மலர்

  செய்திகள்

  பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கிறது
  X

  பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. உள்ளாட்சி தேர்தல், காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்கப்படுகிறது.
  சென்னை:

  தமிழக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. பிரதான எதிர்கட்சியான தி.மு.க. நாளை (திங்கட்கிழமை) முதல் தொண்டர்களிடம் விருப்பமனு பெற உள்ளது. வேட்பாளர் தேர்வின் முதல் கட்டமாக கடந்த சில நாட்களாக சென்னை மாவட்டத்தில் உள்ள தி.மு.க. பகுதி மற்றும் வட்ட செயலாளர்களிடம் நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை கட்சி தலைமை கேட்டு பெற்றது.

  இதற்கிடையே, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் காவிரி பிரச்சினை, உள்ளாட்சித்தேர்தல் குறித்து விவாதிக்க இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளார்.

  உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது? உள்ளாட்சி பகுதியில் ஒவ்வொரு கட்சிகளின் பலம் என்ன? தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது? என்பது குறித்து மாவட்ட செயலாளர்களிடம் தி.மு.க. கருத்து கேட்க உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்களுக்கு விருப்பமனுக்களை வழங்க மாவட்ட செயலாளர்களுக்கு கருணாநிதி அறிவுரை வழங்க உள்ளார்.

  காவிரி பிரச்சினையில் தி.மு.க. எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்? குறித்தும் மாவட்ட செயலாளர்களிடம் கருணாநிதி கருத்து கேட்கிறார். இந்த கூட்டத்தில் காவிரி பிரச்சினை தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
  Next Story
  ×