என் மலர்
செய்திகள்

விபத்தில் மூதாட்டி பலி: மினி பஸ்சை உடைத்த பொதுமக்கள்
பெரியகுளம்:
பெரியகுளம் தென்கரை இந்திராபுரி தெருவை சேர்ந்தவர் ராமர் மனைவி மாரியம்மாள்(65). நேற்று மூன்றாந்தல் அருகே சாலையை கடக்க முயன்ற போது மினிபஸ் மோதி படுகாயமடைந்தார். அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்நிலையில் அதேபகுதியில் வந்த மற்றொரு மினிபஸ்சை அப்பகுதியை சேர்ந்தவர் இங்கே நிறுத்தக்கூடாது. இதனால் விபத்து ஏற்படுகிறது என கூறி டிரைவர் முத்துபாண்டியிடம் (29) வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஏற்பட்ட பிரச்சினையில் முத்துபாண்டியை இரும்புகம்பி மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர்.
பஸ்சின் முன்பக்க கண்ணாடியையும் உடைத்தனர். இதில் படுகாயமடைந்த முத்துபாண்டி பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்த தென்கரை போலீசார் அங்கு வந்து அவர்களை விசாரணைக்கு அழைத்தபோது அனைவரும் ஒன்றுகூடி பெரியகுளம்-தேனி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்ததால் மறியல் கைவிடப்பட்டது.
சாலைமறியலால் அரைமணி நேரம் போக்கு வரத்து பதிக்கப்பட்டது. இதுதொடர்பாக தென்கரை போலீசார் இந்திராபுரி தெருவை சேர்ந்த வீரமலை, முத்துபாண்டி, கவியரசன், முரளி, பிரபு உள்பட 15 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.