என் மலர்

  செய்திகள்

  விருதுநகர் அருகே அரசு பஸ்-லாரி மோதல்: 6 பயணிகள் படுகாயம்
  X

  விருதுநகர் அருகே அரசு பஸ்-லாரி மோதல்: 6 பயணிகள் படுகாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விருதுநகர் அருகே அரசு பஸ் மீது லாரி மோதியதில் 6 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

  விருதுநகர்:

  திருவனந்தபுரத்தில் இருந்த ஸ்ரீரங்கத்துக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. விருதுநகர் -மதுரை ரோட்டில் உள்ள சத்திரரெட்டியபட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த ஒரு லாரி அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது.

  இதில் பஸ்சின் பின் பகுதியில் அமர்ந்து இருந்த பாலாஜி, நித்தின்கிருஷ்ணன், அந்தோணி, ஸ்ரீசாந்த், அபிஷேக், பத்மநாபன் ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

  இவர்கள் ஆம்புலன்சு மூலம் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். 6 பேருக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இதுகுறித்து பாண்டியன் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து குமரி மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் விக்டர்ஜோன்ஸ் என்பவரை கைது செய்தனர்.

  Next Story
  ×