என் மலர்
செய்திகள்

சிறையில் இருந்து சிகிச்சைக்கு அழைத்து வந்தபோது கைதி தப்பினார்
புழல் சிறைச்சாலையில் இருந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது கைதி ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
சென்னை:
புழல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 5 கைதிகளுக்கு இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். அப்போது வடபழனியைச் சேர்ந்த சிவக்குமார் என்ற கைதி தப்பி ஓடிவிட்டார்.
வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட சிவக்குமார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தப்பி ஓடியை சிவக்குமாரை போலீசர் தேடி வருகின்றனர்.
அத்துடன் மற்ற கைதிகளை பத்திரமாக சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகளும் நடைபெற்றது.

Next Story