என் மலர்

    செய்திகள்

    விருதுநகர் அருகே ஆசிரியரின் மனைவி மாயம்: போலீசார் விசாரணை
    X

    விருதுநகர் அருகே ஆசிரியரின் மனைவி மாயம்: போலீசார் விசாரணை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விருதுநகர் அருகே ஆசிரியரின் மனைவி திடீரென மாயமானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    விருதுநகர்:

    விருதுநகர்-அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள எஸ்.வி.பி.என்.எஸ். காலனியை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது36). இவருக்கு உமாமகேஸ்வரி (31) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சங்கரலிங்கம் மாலத்தீவில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    சில மாதங்களுக்கு முன்பு உமாமகேஸ்வரி திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மதுரையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்தாருடன் சேர்த்து வைத்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் உமாமகேஸ்வரி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து சங்கரலிங்கம் விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாமகேஸ்வரியை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×