search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    சென்னையில் மத்திய அரசின் பெட்ரோலிய நிறுவனம் மீது கல்வீசி தாக்கிய 4 பேர் கைது
    X

    சென்னையில் மத்திய அரசின் பெட்ரோலிய நிறுவனம் மீது கல்வீசி தாக்கிய 4 பேர் கைது

    சென்னையில் மத்திய அரசின் பெட்ரோலிய நிறுவனம் மீது கல்வீசி தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சென்னை:

    காவிரி பிரச்சினையில், கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவங்களை கண்டித்து, சென்னை உள்பட தமிழகத்திலும் கண்டன போராட்டங்கள் நடக்கின்றன. தாக்குதல் சம்பவங்களும் ஆங்காங்கே நடக்கின்றன.

    சென்னை நந்தனத்தில் இந்தியன் ஆயில் பெட்ரோலிய நிறுவனத்தின் அலுவலகம் செயல்படுகிறது. மத்திய அரசுக்கு சொந்தமான இந்த நிறுவனம் மீது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கல்வீசி தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். நேற்று முன்தினம் அதிகாலையில் இந்த சம்பவம் நடந்தது.

    தாக்குதலில் ஈடுபட்டவர்கள் துண்டு பிரசுரம் ஒன்றையும் வீசிவிட்டு சென்றனர். இதுதொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் விற்பனை பிரிவு மேலாளர் அஜய் கார்க் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கிரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    தாக்குதலில் ஈடுபட்டதாக, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீபிரசாத் (வயது 24), செல்வபெருமாள் (38), அருண்குமார் (29), நவீன் (23) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×