என் மலர்

  செய்திகள்

  கோயம்பேடு மார்க்கெட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்த போது
  X
  கோயம்பேடு மார்க்கெட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்த போது

  கர்நாடகாவை கண்டித்து வெள்ளையன் தலைமையில் கோயம்பேட்டில் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடகாவை கண்டித்து நடந்த முழு அடைப்பு காரணமாக கோயம்பேடு மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் வெள்ளையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
  சென்னை:

  கர்நாடகாவை கண்டித்து நடந்த முழு அடைப்பு காரணமாக கோயம்பேடு மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் வெள்ளையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

  காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீரை திறந்து விட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கர்நாடகாவில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி சென்னையில் பிரதான காய்-கனி, மலர்கள் அங்காடியான கோயம்பேடு மார்க்கெட் நேற்று முழுவதுமாக அடைக்கப்பட்டு இருந்தது.

  எப்போதும் மக்கள் வெள்ளத்தில் பரபரப்பாக காணப்படும் கோயம்பேடு மார்க்கெட் எந்த விதமான பரபரப்பும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சில கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தன. கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் ஊழியர்கள் கடைகளை சுத்தம் செய்யும் பணியிலும், காய்கறி கழிவுகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டனர்.

  காய்கறிகளுடன் வந்த லாரிகள் கோயம்பேடு வளாகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு இருந்தன. லாரி டிரைவர்கள் அங்கேயே சமைத்து, உணவருந்திய காட்சிகளை பார்க்க முடிந்தது. கோயம்பேடு மார்க்கெட் 5-வது நுழைவுவாயில் அருகே தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் அடையாள ஆர்ப்பாட்டம் நடந்தது.

  இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்கினார். சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் தெய்வசிகாமணி, கோயம்பேடு காய், கனி, மலர் வியாபாரிகள் நல சங்க தலைவர் தியாகராஜன், பொதுச்செயலாளர் மணிவண்ணன், துணைத்தலைவர் சுகுமார், செயலாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கர்நாடகா அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
  Next Story
  ×