search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் வரதராஜன் பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தின விழா
    X

    பெரம்பலூர் வரதராஜன் பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தின விழா

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வரிசைப்பட்டி கிராமத்தில் உள்ள வரதராஜன் பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னியல் பொறியாளர்களின் கூட்டமைப்பு சார்பில் பொறியாளர்கள் தின விழா நடைபெற்றது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வரிசைப்பட்டி கிராமத்தில் உள்ள வரதராஜன் பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னியல் பொறியாளர்களின் கூட்டமைப்பு சார்பில் பொறியாளர்கள் தின விழாவை முன்னிட்டு இன்றைய சமூக சீர்கேடுகளுக்கு காரணம் கல்வி முறையா? வாழ்க்கை முறையா? அல்லது தொழிற்துட்ப வளர்ச்சியா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி அறங்காவலர் ரம்மாதேவிசிவக்குமார் தலைமை வகித்தார். கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் நரேந்திர பிரசாத் முன்னிலை வகித்தார். மின்னியல் துறைத் தலைவர் கிருஷ்ணராஜா வரவேற்றார். கல்லூரி முதல்வர் இளையராஜா பட்டிமன்ற நடுவராக செயல்பட்டார்.

    நிகழ்ச்சியில் கல்வி முறை என்ற தலைப்பில் அருட்செல்வன், சரத்குமார், பிரபாகரன், வாழ்க்கை முறை என்ற தலைப்பில் திருமுருகன், கார்த்திக், சக்திவேல், தொழிற்துட்ப வளர்ச்சி என்ற தலைப்பில் ரஞ்சிதா, விஜயபாஸ்கர், குமரேசன் ஆகியோர் பேசினார்.

    முடிவில் கல்வி முறையே என தீர்ப்பு அளிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை மின்னியியல் துறை மாணவர்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×