என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டையில் ரெயில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினரை படத்தில் காணலாம்.
கர்நாடகாவை கண்டித்து புதுக்கோட்டையில் தி.மு.க.வினர் ரெயில் மறியல்: 300 பேர் கைது
புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் போலீசார் தடையை மீறி ரெயில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:
காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை போராட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு மற்றும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு திரண்டு சென்றனர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளே புகுந்து விடாமல் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் தி.மு.க.வினர் போலீசாரின் தடையை மீறி ரெயில் நிலையத்திற்குள் சென்றனர். பின்னர் அங்கு நின்ற திருச்சி-ராமேஸ்வரம் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி, மெய்யநாதன், நகர செயலாளர் நயினா முகமது, சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகரன் உள்பட 300 பேர் கலந்து கொண்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதே போல் விடுதலை சிறுத்தை கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டத்தில் கரூர் மற்றும் குளித்தலையில் தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் அரியலூரிலும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

Next Story