என் மலர்

    செய்திகள்

    வேலூர் மாநகராட்சி கூட்டம்: தி.மு.க.-காங்கிரஸ் புறக்கணிப்பு
    X

    வேலூர் மாநகராட்சி கூட்டம்: தி.மு.க.-காங்கிரஸ் புறக்கணிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வேலூர் மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் கார்த்தியாயினி தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் கார்த்தியாயினி தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் சொக்கலிங்கம், கமி‌ஷனர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்களும், தே.மு.தி.க. கவுன்சிலர் ஒருவரும் கலந்து கொண்டனர். தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.

    கூட்டத்தில் 70 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? என்று தி.மு.க. கவுன்சிலர் சத்தியமூர்த்தி கூறியதாவது:-

    மாநகராட்சி கூட்டம் நடத்தப்பட்டால் 24 மணி நேரத்துக்கு முன்பாக அஜெண்டா வழங்கப்பட வேண்டும். ஆனால் நேற்று நள்ளிரவுதான் அஜெண்டா வழங்கப்பட்டது.

    தீர்மானங்களை படித்து பார்க்கக்கூட நேரம் இல்லை. எனவேதான் நாங்கள் மாநகராட்சியை புறக்கணிப்பு செய்துள்ளோம்.

    இவ்வாறு சத்தியமூர்த்தி கூறினார்.

    Next Story
    ×