என் மலர்

  செய்திகள்

  மேச்சேரி-மேட்டுப்பட்டி பகுதிகளில் 19-ந்தேதி மின் நிறுத்தம்
  X

  மேச்சேரி-மேட்டுப்பட்டி பகுதிகளில் 19-ந்தேதி மின் நிறுத்தம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேச்சேரி மற்றும் மேட்டுப்பட்டி 19-ந்தேதி மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  சேலம்:

  சேலம் அருகே உள்ள மேச்சேரி துணை மின் நிலையத்தில் வருகிற 19-ந்தேதி (திங்கட் கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

  எனவே, அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேச்சேரி, சூரியனூர், தெத்திகிரிபட்டி, அமரம், மல்லிகுந்தம், பள்ளிப்பட்டி, ஆண்டிக்கரை, பொட்டனேரி, கூணான்டியூர், கீரை காரனூர், செங்காட்டூர், குதிரை காரனூர், பாரக்கல்லூர் மற்றும் எம்.காளிப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை மேட்டூர் அணை எண்.1 மின்வாரிய செயற்பொறியாளர் சேகரன் தெரிவித்துள்ளார்.

  மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகிற 19-ந்தேதி (திங்கட் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஆகவே 19-ந்தேதி அன்று மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, சேசன்சாவடி, முத்தம்பட்டி, வெள்ளாளகுண்டம், கூட்டாத்துப்பட்டி, சின்னக்கவுண்டாபுரம், எஸ்.என்.மங்கலம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

  இந்த தகவலை சேலம் கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×