என் மலர்
செய்திகள்

முத்துப்பேட்டை அருகே இளம்பெண் கடத்தல்: ஊர்க்காவல் படைவீரர் மீது புகார்
முத்துப்பேட்டை அருகே இளம்பெண்ணை கடத்தியதாக ஊர்க்காவல் படை வீரர் மீது புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தா.கீழக்காடு எம்.கே. நகரை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகள் ஜெயந்தி (23). இவர் திடீரென மாயமானார். இது குறித்து அவரது தாய் மாலதி முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை அருமங்காடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் விவேக் கடத்தி சென்று விட்டதாக கூறி உள்ளார்.
புகார் கூறப்பட்டுள்ள விவேக் தற்போது முத்துப்பேட்டை ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story