என் மலர்

  செய்திகள்

  திருப்பூரில் பனியன் குடோனில் தீ விபத்து
  X

  திருப்பூரில் பனியன் குடோனில் தீ விபத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூரில் இன்று காலை பனியன் குடோனில் தீ விபத்தில் கடையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

  திருப்பூர்:

  திருப்பூர் செக்காந்தோட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கு சொந்தமான பனியன் குடோன் சந்தைப்பேட்டையில் உள்ளது.

  இன்று காலை குடோனில் இருந்து கரும்புகை கிளம்பியது. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தனர். குடோன் தீ பிடித்து எரிந்தது. பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. பக்கத்து கடைகளுக்கும் தீ பரவியது.

  இது குறித்து குடோன் உரிமையாளருக்கும், தீயணைப்பு துறைக்கும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

  இருந்தாலும் கடையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

  மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×