என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரத்தில் சித்தராமையா உருவ பொம்மை எரிப்பு: த.மா.கா.வினர் 50 பேர் கைது
    X

    காஞ்சீபுரத்தில் சித்தராமையா உருவ பொம்மை எரிப்பு: த.மா.கா.வினர் 50 பேர் கைது

    காஞ்சீபுரத்தில் சித்தராமையா உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.மா.கா.வினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சிபுரம்:

    கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து காஞ்சீபுரம் தாலுக்கா அலுவலகம் அருகே தமிழ் மாநில காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் மலையூர் புருசோத்தமன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திடீரென அவர்கள் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா உருவ பொம்மையை எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×