என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகத்தில் உள்ள தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
    X

    கர்நாடகத்தில் உள்ள தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

    கர்நாடகத்தில் உள்ள தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.

    ஆலந்தூர்:

    பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் என்பது கண்டிக்கத்தக்கது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கர்நாடக காங்கிரஸ் அரசு திசை திருப்பும் விதமாக மாநில மக்களின் ஆதரவை பெறதான் காவிரி பிரச்சினையை கையில் எடுத்து உள்ளது.

    தமிழக எல்லையில் தமிழர்களின் பாதுகாப்புக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அதில் பா.ஜனதாவும் பங்கேற்க தயாராக இருக்கிறோம். தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமை குறித்து மத்திய நீர்வள அமைச்சகத்திடம் தமிழக பா.ஜனதா பேசி உள்ளோம்.

    மழை காலத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை பெரிய அளவில் எடுக்க வில்லை என்று தெரிகிறது. மழை காலத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காய்ச்சலால் பொன்னேரி, திருத்தணி ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருந்தும் மக்களுக்கு படுக்கை வசதி இல்லாமல் இருக்கிறது. இதில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×