என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரை ஒதுங்கிய டால்பீன் மீன்.
    X
    கரை ஒதுங்கிய டால்பீன் மீன்.

    கோடியக்கரையில் இறந்து கரை ஒதுங்கிய டால்பீன் மீன்கள்

    கோடியக்கரையில் இறந்து கரை ஒதுங்கிய டால்பீன் மீன்களை வனத்துறையினர் கடற்கரையில் புதைத்தனர்.

    வேதாரண்யம்,செப்.10-

    வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீன்பிடி துறைமுகத்திலிருந்து மேற்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் செல்லக்கண்ணி வாய்க்கால் அருகே கடலில் சுமார் 100 மீட்டர் தொலைவில் டால்பின் மீன் ஒன்றும், கடற்கரைக்கு அருகில் ஒன்றும் என இரண்டு டால்பின்கள் அழுகிய நிலையில் இறந்து கரை ஒதுங்கியுள்ளது. மீன்கள் இரண்டும் சுமார் 5 அடி உயரம், 10 நீளமும், சுமார் 300 கிலோ எடை கொண்டதாக காணப்பட்டது.

    இது குறித்த தகவலின் பேரில் கோடியக்கரை வனச்சரக அலுவலர் பழனிச்சாமி தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த மீன்களை கடற்கரையில் புதைத்தனர்.

    Next Story
    ×