என் மலர்
செய்திகள்

பெண்ணை தாக்கி நகை பறித்த டவுசர் கொள்ளையனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை: கோர்ட்டு தீர்ப்பு
பெண்ணை தாக்கி நகை பறித்த டவுசர் கொள்ளையனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி ஜெயங்கொண்டம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகி. இவர் கடந்த 3-1-2015 அன்று அங்குள்ள வனப்பகுதியில் ஆடுகள் மேய்த்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு டவுசர் அணிந்து வந்த மர்மநபர் , அறிவழகியின் கழுத்தை நெரித்து , அவர் அணிந்திருந்த நகையை பறித்து சென்று விட்டார். மயக்கமடைந்த அறிவழகியை அப்பகுதி பொதுமக்கள் மீ ட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கூவாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஜெ. மேலூர் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் மகன் பாலமுருகன் (35) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஜெயங்கொண்டம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி மதிவாணன் தீர்ப்பளித்தார். இதில் பாலமுருகனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.

Next Story