என் மலர்tooltip icon

    செய்திகள்

    துரைப்பாக்கம் அருகே டிரைவரை தாக்கி ஆட்டோ கடத்தல்
    X

    துரைப்பாக்கம் அருகே டிரைவரை தாக்கி ஆட்டோ கடத்தல்

    துரைப்பாக்கம் அருகே டிரைவரை தாக்கி ஆட்டோ கடத்தலில் ஈடுப்பட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருவான்மியூர்:

    பாலவாக்கம், கெனால்புரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் சேட்டு. சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார்.

    இவர் லோடு ஏற்றுவதற்காக கந்தன்சாவடி நோக்கி சென்றார். அப்போது 5 பேர் கும்பல் சேட்டுவை வழி மறித்து தாக்கினர். பின்னர் லோடு ஆட்டோவை பறித்து கடத்தி சென்று விட்டனர்.

    இதுகுறித்து சேட்டு, துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    துரைப்பாக்கத்தை அடுத்த மேட்டுக்குப்பம் வி.ஜி.பி. அவன்யூ 6-வது தெருவை சேர்ந்தவர் ரோகித். சாப்ட்வேர் என்ஜினீயர். நண்பர் 4 பேருடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.

    கடந்த வாரம் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றனர். நேற்று திரும்பி வந்த போது வீட்டு கதவு உடைந்து கிடந்தது. அறையில் இருந்த 3 லேப்-டாப், ரூ.5 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது.

    Next Story
    ×