என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரங்கிமலையில் போலி செக் கொடுத்து ரூ.2 கோடி வாங்க முயற்சி: 9 பேர் கைது
    X

    பரங்கிமலையில் போலி செக் கொடுத்து ரூ.2 கோடி வாங்க முயற்சி: 9 பேர் கைது

    பரங்கிமலையில் வங்கியில் போலி ‘செக்’ கொடுத்து ரூ.2 கோடி வாங்க முயற்சி செய்த தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்
    ஆலந்தூர்:

    பரங்கிமலையை அடுத்த பட்ரோடு பகுதியில் தனியார் வங்கி உள்ளது. நேற்று காலை நந்தம்பாக்கத்தை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ஆனந்தன் ரூ.2 கோடிக்கான செக்கை பணமாக மாற்ற வங்கி ஊழியரிடம் கொடுத்தார். செக்கில் பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவனம் அவருக்கு பணம் கொடுத்தது போல் இருந்தது.

    சந்தேகம் அடைந்த வங்கி ஊழியர் செக்கை சரிபார்த்த போது அது போலியானது என்பது தெரிந்தது. பெங்க ளூரில் உள்ள தனியார் நிறுவனத்தின் செக் போன்று அச்சடிக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து பரங்கிமலை போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ஆனந்தனை கைது செய்தனர். அவர் கொடுத்த செக்கில் வங்கி பெயர் இல்லாததால் சிக்கிக் கொண்டார்.

    ஆனந்தனிடம் நடத்திய விசாரணையில் போலி செக் விவகாரதில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து அவரது நண்பர்கள் கே.கே.நகரை சேர்ந்த வெங்கடேசன், மாங்காடு சீனிவாசன், செல்லூர் ஜெயக்குமார், கோடம்பாக்கம் காந்தி ராஜன், சின்மயா நகர் சுதாநந்தன், அண்ணாநகர் ராஜேந்திரன், தேனி முரளி, அருப்புக்கோட்டை ஆசைத் தம்பி ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

    அவர்களுக்கு போலி செக் கிடைத்தது எப்படி? எங்கு தயாரிக்கப்பட்டது? இதுபோல் வேறு எந்த வங்கியிலும் போலி செக் கொடுத்து பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டு உள் ளார்களா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்.

    போலி செக்கில் குறிப் பிடப்பட்டுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் யாரேனும் மோசடி கும்பலுக்கு உதவி இருக்கலாம் என்றும் போலீ சார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×