என் மலர்

  செய்திகள்

  மதுராந்தகம் அருகே திருமண வீட்டில் தீ விபத்து
  X

  மதுராந்தகம் அருகே திருமண வீட்டில் தீ விபத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுராந்தகம் அருகே திருமண வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் உறவினர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
  மதுராந்தகம்:

  மதுராந்தகத்தை அடுத்த அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னி. இவரது மகள் சந்தியாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த அம்புரோசுக்கும் இன்று திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து இருந்தனர்.

  முன்னதாக நேற்று மாலை மணமகள் வீட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உறவினர்கள் கூட்டத்தால் திருமண வீடு நிரம்பி வழிந்தது.

  அப்போது திருமண விருந்திற்காக சமையல் செய்த அறையில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பந்தலில் பிடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த திருமண வீட்டிற்கு வந்தவர்களும், மணமக்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

  தகவல் அறிந்ததும் மதுராந்தகம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் திருமண வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் பணம் எரிந்து சாம்பலானது.

  இதைத் தொடர்ந்து இன்று காலை மணமகள் வீட்டின் அருகே மற்றொரு இடத்தில் மணமேடை அமைக்கப்பட்டது. அதில் சந்தியா-அம்புரோஸ் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.
  Next Story
  ×