என் மலர்
செய்திகள்

மதுராந்தகம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 பேர் பலி
மதுராந்தகம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்
மதுராந்தகம்:
செய்யூரை அடுத்த சூனாம்பேடு அருகே உள்ள ஈசூர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வழிபாட்டுக்காக வைக்கப்பட்டு இருந்தது.
நேற்று மாலை விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடப்பாக்கம் கடல் பகுதியில் கரைக்கப்பட்டது. இதில் அதே பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் (வயது 40), ராஜ் (33), தமிழ்மணி ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் 3 பேரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். சூனாம்பேடு அருகே சென்றபோது எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் கல்யாணசுந்தரம், ராஜ், தமிழ்மணி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். சூனாம்பேடு போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கல்யாணசுந்தரம், ராஜ் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். தமிழ்மணி மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story