என் மலர்
செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு தாய்லாந்து செல்லும் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் ஏற வந்த பயணிகளின் உடமைகளை சுங்க துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னையை சேர்ந்த அப்துல் ஹக்கிம் ஜாபரின் கைப்பையை திறந்து பார்த்தனர். அதில் கட்டுக் கட்டாக அமெரிக்க டாலர், யூரோ பணம் இருந்தது. பணத்திற்கான ஆவணம் அவரிடம் இல்லை.
இதையடுத்து வெளிநாட்டு பணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய ரூபாயில் இதன் மொத்த மதிப்பு ரூ. 25 லட்சம் ஆகும்.
அப்துல் ஹக்கிம் ஜாபர் சுற்றுலா விசாவில் தாய்லாந்து செல்ல இருந்தார். அவருக்கு வெளிநாட்டு பணம் கிடைத்தது எப்படி? யாருக்கு கொண்டு செல்கிறார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story