என் மலர்
செய்திகள்

காஞ்சீபுரம் அருகே கல்குவாரி குட்டையில் குழந்தையுடன் குதித்த ஆசிரியர்: குழந்தை சாவு
காஞ்சீபுரம் அருகே கல்குவாரி குட்டையில் குழந்தையுடன் குதித்த ஆசிரியரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டனர். இதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அடுத்த மாகரல் மேட்டு காலனியை சேர்ந்தவர் பெருமாள். தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி. இவர்களுக்கு 2 வயதில் தஞ்சனா என்ற மகள் இருந்தாள்.
கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இன்று காலை பெருமாள் குழந்தை தஞ்சனாவை தூக்கி கொண்டு அருகில் உள்ள கல்குவாரிக்கு சென்றார். அங்கிருந்த குட்டையில் குழந்தையை கட்டி பிடித்தவாறு குதித்தார்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் குட்டையில் குதித்து பெருமாள், குழந்தையை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் குழந்தை தஞ்சனா இறந்து இருந்தது. பெருமாளை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

Next Story