என் மலர்
செய்திகள்

பவானிசாகர் அணையில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்: பெண்கள் உள்பட 400 பேர் கைது
பவானிசாகர் அணையில் தண்ணீர் திறக்கக்கோரி கீழ்பவானி விவசாயிகள் சாலை மறியல் ஈடுபட்ட பெண்கள் உள்பட 400 பேர் கைது செய்யப்பட்டனர்
சென்னிமலை:
கீழ்பவானி வாய்க்காலில் பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என கீழ் பவானி பாசன விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தண்ணீர் திறக்காவிட்டால் சென்னிமலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆடு- மாடுகளுடன் பஸ் நிலையம் முன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என கீழ்பவானி விவசாயிகள் சங்க நிர்வாகியும் முருங்கத்தொழுவு பஞ்சாயத்து தலைவருமான ரவி அறிவித்திருந்தார்.
அதன் படி விவசாய சங்கத்தினர் மற்றும் ஏராளமான விவசாயிகள் இன்று காலையிலேயே மறியல் போராட்டம் நடத்த சென்னிமலை பஸ் நிலையம் அருகே குவிந்தனர்.
பிறகு அவர்கள் சென்னிமலை பஸ் நிலையம் அருகே மறியல் செய்து கோஷங்கள் எழுப்பினர். மறியல் செய்த 150 பெண்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
விவசாயிகள் போராட்டத்தையொட்டி ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டனர். இதனால் சென்னிமலையில் காலையில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
சென்னிமலை, ஈங்கூர், பெருந்துறை உள்பட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அணி வகுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story