என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரத்தில் டெய்லர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    காஞ்சீபுரத்தில் டெய்லர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

    காஞ்சீபுரம் அருகே டெய்லர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் கலியலூரை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவர் அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரசவத்திற்காக சுங்குவார் சத்திரத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் மோகன்தாஸ் நேற்று வீட்டை பூட்டி விட்டு மனைவி மற்றும் குழந்தையை கூட்டி வர சுங்குவார்சத்திரம் சென்றார்.

    இதையறிந்த மர்ம நபர்கள் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து அதில் இருந்த 5 பவுன் நகை, 5 ஆயிரம் ரொக்க பணம், வெள்ளி கொலுசு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதன் மதிப்பு ரூ.1½ லட்சம்.

    இதுகுறித்து மோகன்தாஸ் வாலாஜாபாத் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிவு செய்து நகையை கொள்ளையடித்த மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×