என் மலர்
செய்திகள்

சேலையூரில் வங்கி மேனேஜர் வீட்டில் கொள்ளை
சேலையூரில் வங்கி மேனேஜர் வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
சேலையூர் மப்பேட்டை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் பிராட்வேயில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு மாடம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் இன்று காலை வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 1 கிலோ வெள்ளி பூஜை பொருட்கள் பீரோவில் இருந்த 10 ஆயிரம் பணம் கொள்ளை போய் இருந்தது.
இதுகுறித்து சேலையூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story






