என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்திரமேரூர் அருகே மணல் கடத்திய 4 பேர் கைது
    X

    உத்திரமேரூர் அருகே மணல் கடத்திய 4 பேர் கைது

    உத்திரமேரூர் அருகே மணல் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    காஞ்சீபுரம்:

    உத்திரமேரூர் ஆலப்பாக்கம் ஆற்றுபடுகையில் மணல் கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் ரோந்து சென்றபோது மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய ஆலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், குமார், சேகர் ஆகியோரை கைது செய்தனர். மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் சூணாம்பேடு ஏரி பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி சூணாம்பேடு போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×