என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாய் திட்டியதால் பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை
    X

    தாய் திட்டியதால் பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை

    தாய் திட்டியதால் பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பன். இவரது மனைவி சுமதி. மகள் புவனேஸ்வரி ஊராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவந்தார்.

    புவனேஸ்வரி வீட்டு வேலை செய்யாததை சுமதி கண்டித்ததால் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புவனேஸ்வரி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×