என் மலர்
செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் விமான சேவையை அதிகரிக்க முடிவு
சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் சேவையை அதிகரிக்கவும், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தவும் இந்திய விமான கட்டுப்பாட்டு துறை திட்டமிட்டு உள்ளது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் தினமும் 400-க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து புறப்பட்டு செல்கின்றன. சென்னை விமான நிலைய வான் கட்டுப்பாட்டு மையம் வழியாக தினமும் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் கையாளப்படுகின்றன. இந்த விமானங்களின் சேவையை அதிகரிக்கவும், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தவும் இந்திய விமான கட்டுப்பாட்டு துறை திட்டமிட்டு உள்ளது.
கூடுதல் விமானங்களை கையாளுவது, மாசு ஏற்படாமல் தடுப்பது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பது சம்பந்தமாக சென்னை வான் எல்லை கட்டுப்பாட்டு அதிகாரிகள், விமான நிறுவன அதிகாரிகள், விமான நிலைய ஆணையக அதிகாரிகள் ஆகியோருக்கு டெல்லியில் இருந்து வந்த சிறப்பு குழு பயிற்சி அளித்து வருகிறது. வருகிற 15-ந்தேதிக்கு பின்னர் விமான சேவை படிப்படியாக உயர்த்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story