என் மலர்tooltip icon

    செய்திகள்

    பம்மலில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
    X

    பம்மலில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

    பம்மலில் மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தாம்பரம்:

    பம்மல் சிக்னல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சீதாலட்சுமி (75). இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சீதா லட்சுமி கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்து சென்றுவிட்டனர்.

    இது குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×