என் மலர்
செய்திகள்

அரியலூர் தொகுதியில் புதிய பள்ளி கட்டுமான பணிகள்: தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆய்வு
அரியலூர் தொகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பள்ளி கட்டிட பணிகளை அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரியலூர்:
அரியலூர் சட்டமன்ற தொகுதியில் அரியலூர் யூனியனில் தாமரைகுளம், ரெட்டிபாளையம், திருமானூர் ஒன்றியத்தில் வாரணவாசி, ஆகிய கிராமங்களில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுமார் ரூ.3½ கோடியில் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நடப்பு ஆண்டிலேயே புதிய கட்டிடத்தில் வகுப்புகள் இயங்கவேண்டும் என்றும், அதனால் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளை கேட்டுக்கொண் டார். இந்த நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story






