என் மலர்

  செய்திகள்

  கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்களுக்கு அண்ணா சைக்கிள் போட்டிகள் 4-ந்தேதி நடைபெறுகிறது
  X

  கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்களுக்கு அண்ணா சைக்கிள் போட்டிகள் 4-ந்தேதி நடைபெறுகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னாள் தமிழக முதல்வர் அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி மாணவ மற்றும் மாணவியர்களுக்கு 04.09.2016 அன்று காலை 6.30 மணிக்கு துவங்கி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நடைபெற உள்ளது.
  கரூர்:

  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கரூர் மாவட்டப்பிரிவின் சார்பாக முன்னாள் தமிழக முதல்வர் அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி மாணவ மற்றும் மாணவியர்களுக்கு 04.09.2016 அன்று காலை 6.30 மணிக்கு துவங்கி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நடைபெற உள்ளது.

  இதுகுறித்த செய்தியினை கரூர் கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவிக்கையில் அண்ணா சைக்கிள் போட்டியில் கலந்து கொள்ள மாணவ மற்றும் மாணவியர்கள் இந்தியாவில் தயாரான மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பள்ளித் தலைமையாசிரியரிடம் வயது சான்றிதழ் பெற்று வருதல் வேண்டும். வீரர் மற்றும் வீராங்கனைகள் போட்டி துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே போட்டி நடத்தப்படும் இடத்திற்கு வந்து தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். சாதாரண கைப்பிடி கொண்ட மிதிவண்டியாக இருத்தல் வேண்டும். அகலமான கிராங்க் பொருத்தப்பட்ட மிதிவண்டிகளை பயன்படுத்துதல் கூடாது. மிதிவண்டி போட்டியில் நேரும் எதிர்பாராத விபத்துகளுக்கும் தனிப்பட்ட பொது இழப்புகளுக்கும் பங்கு பெறும் மாணவ, மாணவிகளே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ஒப்புதல் அளிக்க வேண்டும். 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ தூரமும், மாணவியர்களுக்கு 10 கி.மீ தூரமும், 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவியர்களுக்கு 15 கி.மீ. தூரமும், 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவியர்களுக்கு 15 கி.மீ. தூரமும் நடத்தப்பட உள்ளது.

  இப்போட்டியில் பங்கு பெற்று முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு சான்றிதழும் முதல் பத்து இடங்களைப் பெறுபவர்களுக்கு போட்டியில் கலந்து கொண்டமைக்கான சான்றிதழ் மட்டும் வழங்கப்படும். இச்சைக்கிள் போட்டியில் கலந்து கொள்ள அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களை பள்ளி வயது சான்றிதழுடன் 4.9.2016 அன்று காலை 6.00 மணிக்கு போட்டி நடைபெறும் இடத்திற்கு அனுப்பி வைக்குமாறு கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவிக்கின்றார்.
  Next Story
  ×