என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டையில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    புதுக்கோட்டையில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளதால் பயிர்கள் நல்ல விளைச்சல் கொடுக்கும் என விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை, திருமயம், பொன்னமராவதி, ஆலங்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல கனமழை பெய்தது. இதனால் சாலைகளிலும், தெருக்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆலங்குடி, வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் கத்திரி, மிளகாய், மக்காச்சோளம், தக்காளி, வெண்டை உள்ளிட்ட பயிர்கள் நல்ல விளைச்சல் கொடுக்கும் என விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×